Profile of KiNa வாழ்க்கைக் குறிப்பு

About NIRLAC
Prof. K. Nachimuthu Institute of Research for Language & Culture (NIRLAC) (பேரா.கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்’) 2007ஆம் ஆண்டு முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனமாகும்.

பேரா. கி.நாச்சிமுத்து அவர்கள் கோவை மாவட்டம் கொடுவாய் என்ற ஊரைச் சார்ந்தவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, பின் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மொழித்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
தற்பொழுது திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தமிழ்ப் பணியைத் தமிழ் உலகு அறியும். இந்தியா மட்டுமல்ல ஜெர்மனி, போலந்து நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரிடம் தமிழ் கற்ற மாணவர்கள் இவர் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் இந்நிறுவனம் கோவையில் தொடங்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் வாயிலாக, பேரா. கி.நா. அவர்களின் கட்டுரைகள் ஐந்து நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. ‘கி.நா. தமிழியல்’ என்ற காலாண்டு இதழும் இந்நிறுவனத்தின் மூலம் வெளிவருகின்றது. சித்த மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சுவடிகளைப் படிப்பது பற்றிய பயிலரங்கையும் இந்நிறுவனம் நடத்தியுள்ளது. இந்நிறுவனம் நடத்தும் முதல் கருத்தரங்கு இதுவாகும்.
கருத்தரங்கு குறித்த பொதுவான அறிவிப்புகள்
- கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு மதிய உணவும் தேநீரும் வழங்கப்படும்.
- பல்கலைக்கழகம், கல்லூரியில் பணிபுரிகின்ற பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும், தமிழ் பயிலும் முதுகலை, இளங்களை மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
- மொழி ஆர்வலர்களும் மருத்துவர்களும் கலந்து கொள்ளலாம்.
- வெளியூரில் இருந்து வருகின்ற பங்கேற்பாளர்களுக்குச் சிறு வசதிகள் செய்து தரப்படும். தங்கள் வரவு குறித்து முன்
அறிவிப்பு வேண்டும்.
கருத்தரங்க அமைப்புக் குழு
முனைவர் ந. சண்முகம், Ph.D.,
மதிப்புறு தலைவர்
பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
கோயம்புத்தூர்-641030
முனைவர் மா.ரேணுகா, Ph.D.,
மதிப்புறு ஆலோசகர்
பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
கோயம்புத்தூர்-641030
திரு செ.அசோக்குமார், M.B.A.,
செயலர்
பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
கோயம்புத்தூர்-641030
கைபேசி: 94875 64771
திரு சுரேஷ் மனோகரன், B.E.,
பொருளாளர்
பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
கோயம்புத்தூர்-641030
அலுவலகத் தொலைபேசி எண்:
+91 94422 49293
+91 94422 59293
மின்அஞ்சல்:
mailtonirlac@gmail.com
இணையத்தளம்:
www.nirlac.org.in